சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று துவக்கம் - 38.83 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு
- நாடு ம ுழுவதும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
- கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன.
- மேலும் விரிவான விடையளிக்கும் தேர்வு முறைகளுக்கு மாறாக, அப்ஜெக்டிவ் முறையிலான தேர்வுகள் நடத்தப்பட்டன.
- தற்போது வழக்கமான முறையில் இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன.
- பத்தாம் வகுப்பு பொது தேர்வை 12 லட்சத்து 47 ஆயிரத்து 364 மாணவர்களும், 9 லட்சத்து 39 ஆயிரத்து 566 மாணவிகளும் எழுதுகின்றனர்.
- இதே போல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு, 9 லட்சத்து 51 ஆயிரத்து 332 மாணவர்களும், 7 லட்சத்து 45 ஆயிரத்து 433 மாணவிகள் எழுதுகின்றனர்.
- இரண்டு தேர்வுகளும் சேர்த்து, 7240 மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. மேலும் 26 வெளிநாடுகளிலும் சிபிஎஸ்இ பொது தேர்வுகள் நடைபெறுகின்றன.