வடகொரியாவில் உள்ள மேற்கு கடல் பகுதியில், ஹவ்சால்-1 ரா-3 என்ற ஏவுகணையையும், பையால்ஜி என்ற விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணையையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப போர்க்கருவிகளில் தொழில்நுட்பங்களை புகுத்தும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த இரு சோதனைகளும் நிகழ்த்தப்பட்டிருப்பதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.