காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-09 01:04 GMT
  • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி.. குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு பதவியேற்பு விழா......குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்...
  • பிரதமர் பதவியேற்பு விழாவையொட்டி, டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு.. ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் பறக்கத் தடைவிதிப்பு....... எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரம்...
  • பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு... முக்கிய பிரமுகர்கள், மதத் தலைவர்கள், பிரபலங்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்கள்....
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் 10 இடங்கள் வரை கேட்டுள்ளதாக தகவல்.... தெலுங்கு தேசத்திற்கு 4 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 இடங்களும் ஒதுக்க பாஜக முன்வந்திருப்பதாக தகவல்.... பவன் கல்யான், சிராக் பஸ்வான், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிகளுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம்...
  • பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை..காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தகவல்...
  • காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு... டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு...
  • மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி செயல்பட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...... எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் இழுபறி...
  • தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்... ஜூன் 14ம் தேதி கோவையில் முப்பெரும் விழா உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்... 
  • தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகியோர் நீட் விலக்கு கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு உணர்த்த வேண்டும்... திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்...
  • ஆட்சியமைக்கும் செல்வாக்கைக் கூட பாஜக பெறவில்லை என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.... மத்தியில் பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டும் என்றும் சூளுரை..... 
  • அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது என்பது முடிந்து போன கதை.... ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவின் அறிக்கை குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி தடாலடி பதில்... 
  • ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உருவாக்கம்... ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர், கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக பேட்டி...
  • பாஜகவில் குற்றவாளிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழிசை செளந்தரராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு.... அண்ணாமலையின் செயல்பாடு குறித்த தமிழிசையின் கருத்தால் மீண்டும் சர்ச்சை... 
  • தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய்-க்கு சீமான் நன்றி..... மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆரூயிர் தம்பிக்கு நன்றி என்றுஎக்ஸ் தளத்தில் பதிவு.... 
  • பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடப்போவது யார்? இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பலப்பரீட்சை... 
Tags:    

மேலும் செய்திகள்