அதனால் தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையைப் பெற, வாக்களித்ததற்கான சான்றைச் சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியைத் தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாததை அடுத்து, தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியும்? எனக் கேள்வி எழுப்பி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.