தொகுதி பங்கீட்டில் இழுபறி - கூட்டணியில் லேசான சலசலப்பு .. | DMK | Election 2024
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிலவரம்,தேர்தல் பணிகள் குறித்து அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் தொகுதி பங்கீடு நிலவரம் தொடர்பாகவும் தேர்தல் பணிகள் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.