காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- திருச்சி, மதுரை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை... ஊட்டியில் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் திடீர் நிலச்சரிவு...
- சென்னையில் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை... புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மிதமான மழை நீடித்தது......
- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் திடீரென பெய்த கனமழை... காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் துண்டிப்பு...
- மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு....
- வருகிற 9ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்..... பதவியேற்பு விழாவில் பங்கேற்க அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு.....
- டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்... தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் டெல்லி சென்றனர்... பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் டெல்லி பயணம்...
- மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்..... வருகிற 8ம் தேதி காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுவதாக, கட்சி மேலிடம் அறிவிப்பு....
- பங்குச் சந்தையில் 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்...
- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி கூறுவதாக பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல் கண்டனம்... பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த ராகுல் முயற்சிப்பதாகவும் விமர்சனம்...
- நாடாளுமன்றத்தின் முக்கிய இடங்களில் இருந்து காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு... 3 சிலைகளும் மற்றொரு இடத்தில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம்...
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஓய்வு கொடுங்கள்... EVM மீதான அவதூறுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதில்...
- தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன், டெல்லி பயணம்... அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பி.எஸ் அழைப்பு...
- டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த அமெரிக்கா... சூப்பர் ஓவரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது...