காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- மூன்றாவது முறையாக, மோடி பிரதமர் ஆவதற்கு நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு... பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்வு...
- நிதியமைச்சர் உட்பட 10 அமைச்சர்கள், சபாநாயகர் பதவி மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன் வைத்ததாக தகவல்... ஐந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குமாறு நிதிஷ் குமார் வலியுறுத்தியதாகவும் தகவல்...
- தேச வளர்ச்சி, மாநில விருப்பத்திற்கு முன்னுரிமை வழங்கப் போவதாக பிரதமர் மோடி உறுதி... தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் அறிவிப்பு...
- மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு, பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெறாத சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற 10 எம்.பி.க்கள் ஆதரவு... அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசியதாக தகவல்... பா.ஜ.க. கூட்டணியின் பலம் 300ஐ தாண்டியது...
- டெல்லியில் நாளை நடைபெறும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்வாகிறார்... குடியரசுத் தலைவரை நாளை நேரில் சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பதற்கு உரிமை கோருகிறார், பிரதமர் மோடி...
- வருகிற 8ம் தேதியன்று மோடி, மீண்டும் பிரதமராக பதவியேற்பதாக தகவல்... தொடர்ந்து, 3வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கும் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்...
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில், இலங்கை பிரதமர் ரனில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்கின்றனர்... பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றனர்...
- மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி மூலமாக வாழ்த்து... இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட 75க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்...
- பிரதமர் மோடிக்கு கைலாசா சார்பாக வாழ்த்து தெரிவித்தார், நித்தியானந்தா... மோடியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு, தலைமைப் பண்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் பாராட்டு...
- 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து... பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என விளக்கம்... தேர்தலில் அபார வெற்றியை பெற்ற முதல்வர் ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து...
- டெல்லியில் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்... மத்திய அரசில் முக்கிய பங்காற்றி, தென் மாநில உரிமைகளை சந்திரபாபு நாயுடு பாதுகாப்பார் எனவும் நம்பிக்கை...
- டி-20 உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா... அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்...