காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வெற்றி... ஆட்சி அமைக்க முனைப்பு... இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி...
- பா.ஜ.க. அதிக தொகுதிகளைப் பெற்றாலும், கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு... அறுதிப் பெரும்பான்மை அமையாததால் 10 ஆண்டுக்கு பிறகு கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் அச்சாரம்...
- பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், ஆந்திர முதல்வராகும் சந்திரபாபு நாயுடுவும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு... கடைசி நேரத்தில் கூட்டணி மாறுமா? என்பதும் கேள்விக்குறி...
- பா.ஜ.க. அலுவலகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... மாநில கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவோம்... இனி, மக்களுக்காக 18 மணி நேரம் பணியாற்றுவேன் என்றும் பிரதமர் மோடி உறுதி...
- பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.30க்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை... ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்...
- ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு... தங்கள் உத்தியை முன்கூட்டியே சொன்னால் மோடி உஷாராகி விடுவார் என்றும் தகவல்...
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை... கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு...
- எதிர்க்கட்சியில் அமரப் போகிறோமோ, ஆட்சி அமைக்கப் போகிறோமோ என்பது, இன்று தெரியும்... மோடியை மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டி உள்ளதாகவும் ராகுல்காந்தி சூசகம்...
- மக்களின் நம்பிக்கையை இழந்த பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்... இந்தியா கூட்டணியை இனி உடைக்க முடியாது என்றும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்...
- பா.ஜ.க. கூட்டணியின் முக்கிய முகமான சந்திரபாபு நாயுடுவை இழுக்க காங்கிரஸ் தீவிரம்... ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்...
- மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்குகளை பெற்ற நோட்டா... பா.ஜ.க. வேட்பாளர் சங்கர் லால்வாணி 10 லட்சத்து 8 ஆயிரத்து 77 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...
- ஒடிசா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ.க. வெற்றி... முதல்முறையாக ஆட்சியை பிடித்தது... ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி தோல்வி...
- பங்கு சந்தையில், மக்களவை தேர்தல் முடிவுகளின் எதிரொலி... நேற்று, ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 17 லட்சம் கோடி ரூபாய் இழப்பு...
- ஓட்டுநரின் கவனக்குறைவால் நிற்காமல் சென்ற ரயிலை, அபாய சங்கிலியை இழுத்து நிறுத்திய பயணிகள்... ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி இயக்கி சென்று பயணிகளை இறக்கி விட்ட ஓட்டுநர்...
- உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை... நியூயார்க்கில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டி...