காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா 34 நாட்களுக்கு பின் நாடு திரும்பினார்.... விமான நிலையத்தில் வைத்து கைது செய்த சிறப்பு புலனாய்வு குழு.....
- பெங்களூரு எஸ்ஐடி அலுவலகத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விடிய விடிய விசாரணை... சிறப்பு விசாரணைக் குழு முன்பு இன்று ஆஜர்படுத்த முடிவு......
- பெரும்பாக்கம் சதுப்பு நில கோரைப் புற்களில் பற்றியெறிந்த காட்டுத் தீ.....3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்......
- சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு... பல மணி நேரம் காத்திருந்தும் மின்சாரம் வராததால், பொது மக்கள் சாலை மறியல்......
- கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு தியானத்தில் அமர்ந்தார் பிரதமர் மோடி.. கடலுக்கு நடுவே மூன்று நாள் தவம் மேற்கொள்ளும் நிலையில், உச்சகட்ட பாதுகாப்பு.....
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்.....கோவில் நிர்வாகம் சார்பில், வஸ்திரம் போர்த்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.......
- நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பாஜகவும், பிரதமர் மோடியும் முயற்சி..... ஜூன் 4ஆம் தேதி தெளிவான தீர்ப்பை அளிப்பார்கள் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை....
- திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம்... ராஜராஜேஸ்வரி சத்யகிரீஸ்வரர் ஆலயத்திலும் வழிபாடு....
- நமது மரபணுவிலேயே சனாதன தர்மம் நிறைந்துள்ளது.. சனாதனத்தை வெகுவிமர்சையாக கொண்டாடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு...
- சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில் போக்குவரத்து ரத்து... பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரத்து என தென்னக ரயில்வே அறிவிப்பு....
- தெலங்கானாவில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்....
- டிடிஎஃப் வாசனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகிறாரா யூடியூபர் வி.ஜே.சித்து... செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது போன்ற வீடியோ பதிவால் சர்ச்சை....
- இஸ்ரேல் போரை முழுமையாக நிறுத்தினால் பேச்சுவார்த்தை"படுகொலைக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஹமாஸ் அறிவிப்பு
- பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக தாக்குதல்களை அதிகரிக்க முடிவு..... ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு...