காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2024-05-28 01:00 GMT
  • தமிழகத்தில் வரும் 31ஆம் தேதிவரை, வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நெற்பயிர்கள் கடும் சேதம்... இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்கக்கோரி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, சபாநாயகர் அப்பாவு கடிதம்...
  • பீகார் மாநிலம் பாலிகஞ்சில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி... திடீரென மேடை சரிந்ததால் அதிர்ச்சி... 
  • ஜூன் 4-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு... தோல்வி அடைந்த பின் இந்தியா கூட்டணி கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது பழிபோடுவார்கள் என்றும் விமர்சனம்... 
  • வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை... திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அறிவிப்பு...
  • தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறதா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் எழுந்துள்ளது... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா விமர்சனம்... 
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு இந்துத்வ வாதி தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்... விவாதிக்க தயார் எனவும் அதிமுகவினருக்கு அழைப்பு...
  • தமிழகம் முழுவதும் ஜூன் 9ம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு... டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு...
  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார சேவையில் மாற்றம்... காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு... 
  • நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக விசாரணை தீவிரம்... டிஎன்ஏ பரிசோதனைக்காக குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு...
  • நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தால், கடும் போக்குவரத்து நெரிசல்... பலத்த போலீசார் பாதுகாப்புடன் சொந்த ஊரில் உடல் அடக்கம்... 
  • காரைக்கால் அருகே திருப்பட்டினத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை... அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் வெட்டிக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை... 
  • பப்புவா நியூகினியா தீவில் மேலும் நிலச்சரிவு அபாயம் - 8 ஆயிரம் பேர் வெளியேற்றம்.... 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளதாக , அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரர் நடால் அதிர்ச்சி தோல்வி... நடாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார், ஜெர்மனி வீரர் வ்.....
Tags:    

மேலும் செய்திகள்