காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2024-05-19 00:54 GMT
  • திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானம் திருச்சி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கம்..... பத்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு........
  • மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு......... ஒருசில இடங்களில இன்று முதல் 21ம் தேதி வரை அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை.... 
  • ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் செல்https://youtu.be/hv0jHASFY7Yவோர் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை..... பாதுகாப்பு வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தல்....
  • கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால், சிங்காநல்லூர் பேருந்துநிலையத்தை தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு.... மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு-..... 
  • பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளம்..... குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி....
  • வால்பாறை-பொள்ளாச்சி 16வது கொண்டை ஊசி வளைவில் கனமழையால் உருண்டு விழுந்த பாறைகள்..... நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானது...... 
  • கனமழை எச்சரிக்கையால், நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, தலையணை, நம்பிக்கோவில், மாஞ்சோலைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும்.... தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.... 
  • மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை எதிரொலி......  வைகாசி மாத பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை..... 
  • தமிழ்நாட்டில் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை.... திருச்சியில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது...........
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை.... சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் தணிந்தது.....
  • சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி அபாரம்.. 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது...  
Tags:    

மேலும் செய்திகள்