காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-11 00:56 GMT
  • உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உற்சாக வரவேற்பு..... 
  • கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு.... உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணம் என்றும் அரசியல் தலைவர்கள் பெருமிதம்..... 
  • டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் சந்திப்பு........ வாக்கு சதவிகித குளறுபடி குறித்து ஆயிரத்து 520 புகார்களைஅளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார்.... 
  • தேர்தல் ஆணையத்திடம் ஆளுங்கட்சியினரின் தேர்தல் விதிமீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேட்டி.... தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்........
  • வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் விளக்கம்.... காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் பதில்.... 
  • இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.... ஏழை மகன் மக்கக்கு சேவையாற்றுவதை ஜமின் மனப்பான்மை கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் காட்டம்....... 
  • பத்து ஆண்டுகளாக அதானி, அம்பானி குறித்து பேசாத மோடி தற்போது பேசுவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி.... மோடியும், அமித்ஷாவும் மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் விமர்சனம்...
  • டெல்லி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப்புயல்...... பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தல்............
  • நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மையத்தில் பி.எஸ்.4 இஞ்சின் வெற்றிகரமாக பரிசோதனை.... இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்.....
  • பத்மபூஷண் விருதை விஜயகாந்த் வாங்கியிருந்தால், கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும் என பிரேமலதா உருக்கம்..... விருதை உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக பேச்சு............
  • பட்டாசு ஆலைகளில் விதிமீறல் கண்டறியப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..... வி​திமீறல் குறித்து கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்......
  • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி.... 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது...
Tags:    

மேலும் செய்திகள்