காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;

Update: 2024-05-07 01:02 GMT
  • மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு... 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடக்கிறது...
  • குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் இன்று வாக்களிக்கிறார், பிரதமர் மோடி... நாரன்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களிக்கிறார்... 
  • கறுப்பு பணத்தை பிடிப்பதால் எதிர்க்கட்சிகள் தன் மீது அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு... ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு...
  • மக்களவை தேர்தலில் பாஜக 150 இடங்களை கூட பெறாது... மத்திய பிரதேச மாநிலம் ஜோபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்...
  • 'டீப் பேக்' பிரச்சார வீடியோக்களை, சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு... 
  • 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பணிகள் கடும் பாதிப்பு... அதிமுக பொது செயலாளர் ஈ.பி.எஸ். கண்டனம்... 
  • கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது...தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்...
  • தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய பீகார் மாநில கல்விக்குழு வருகை... பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து இன்று ஆய்வு...
  • வடதமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.... 
  • ஐ.பி.எல் தொடரின் 55வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி... சதம் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார், மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ்...
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை... இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால் எகிறும் எதிர்பார்ப்பு...
Tags:    

மேலும் செய்திகள்