காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி எனத் தகவல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது...
- மேற்குவங்க ஆளுநர் ஆனந்த் போஸ் மீது பெண் பாலியல் புகாரால் பரபரப்பு... பிரதமர் மோடி பிரசாரத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சை ...
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை... பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...
- ஏற்காட்டில் கடும் வெயிலுக்கு நடுவே பெய்த திடீர் மழை... மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள்
- வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..... 110 டிகிரியை தாண்டி கடும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் திடீர் மழையால் உற்சாகம்....
- கோடையை குதூகலிக்க நீலகிரிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்.... வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் பதிவானதால் அவதி....
- கொடைக்கானல் பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் 10வது நாளாக பற்றி எரியும் காட்டு தீ... சுற்றுலாப் பயணிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...
- தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதல் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு.... வட மாவட்டங்களில் மேலும் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கை......
- சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல்........ கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.. கல்வீச்சு சம்பவத்தால் தொடரும் பதற்றம்......
- ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி... ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல்...
- ஐ.பி.எல். 51வது லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை, கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை... மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி...