காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில், சின்னங்களை பதிவேற்றும் மின்னூட்டத்தை பாதுகாப்பாக வைக்கத் தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்... மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு...
- பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவார்கள் என இந்தியா கூட்டணி, இட்டுக்கட்டிய பொய்யை சொல்வதாக, பிரதமர் மோடி குற்றச்சாட்டு... கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவின் பாலியல் சர்ச்சை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி...
- ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை தேவை...பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்...
- தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை... காங்கிரஸ் குறித்து இழிவான வகையில் கருத்து தெரிவித்த புகாரில், 48 மணி நேரம் தடை விதித்து உத்தரவு...
- கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரும் பணக்கார கட்சியாக பா.ஜ.க. மாறியுள்ளது... அஸ்ஸாம் மாநிலம் துப்ரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...
- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து...3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்.... பதற வைக்கும் சி.சி.டி.வி. காட்சி...
- விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கல்குவாரி வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. குவாரி உரிமையாளர் கைது... எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பேட்டி...
- விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்... தேர்தல் ஆணைய அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
- ஐ.பி.எல். லீக் தொடரில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி... 17 புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப் அணி...
- ஐ.பி.எல். தொடரின் 50வது போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் போட்டி... ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில், இன்று இரவு 7.30க்கு பலப்பரீட்சை...