காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- இன்று உழைப்பாளர் தினம்... உலகம் முழுவதும் தொழிலாளர்கள் உற்சாகம்... அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து...
- கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என, தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்... நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து...
- ஓ.பி.சி., பட்டியலினத்தவரின் இடஒதுக்கீட்டை பறித்து, வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் திட்டம் என, வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்... வேட்பு மனு தாக்கல் செய்யும்போது புனிதமான அரசியல் சாசனத்தை உடன் வைத்துக் கொள்ளுங்கள் என்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்...
- மே 7ம் தேதி, தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மே 25ல் வாக்குப்பதிவு... தேர்தல் தேதியை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
- மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 69 புள்ளி 72 சதவீதம் வாக்குப்பதிவு... இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
- ஆந்திராவில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட கட்டுக்கட்டான பணம் பறிமுதல்... வாகன ஓட்டுனர் கைது- போலீஸ் விசாரணை...
- தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது, மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் தண்டனை... அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து...
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1ம் தேதி நடத்தக்கூடாது.... வெப்பம் தணிந்த பிறகு நடத்தலாம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்...
- சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு... படுகாயம் அடைந்தோருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...
- விபத்து ஏற்பட்ட பரபரப்பு நிமிடங்கள்... ஏற்காடு பேருந்து விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணிகள் பேட்டி...
- அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.... முப்பது கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை...
- கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை... 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம்... ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவு...
- ஐ.பி.எல். 48வது லீக் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ... 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்...
- ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 49வது லீக் போட்டியில், சென்னை - பஞ்சாப் அணிகள் மோதல்... சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை...