காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- பயங்கரவாதிகளின் வீட்டுக்கே சென்று கொலை செய்பவர்தான் மோடி... மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்...
- பிரஜ்வல் ரேவண்ணா தப்பிச் செல்ல அனுமதித்த மோடிக்கும், அமித்ஷாவுக்கும், பெண்களின் மாங்கல்யம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை... கர்நாடக மாநிலம் கலபுருகியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...
- பீகாரில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் அதிர்ச்சி... பைலட்டின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு...
- இந்தியாவில் இனி எந்த பெண்ணும் தங்கள் குடும்ப சிகிச்சைக்காக தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை இருக்காது.... காங்கிரஸ் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டு ராகுல் காந்தி எம்.பி., கருத்து...
- தன்னை கைது செய்ய முயற்சிகள் நடைபெறுவதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு... எதற்கும் அஞ்ச மாட்டோம் என்றும் ஆவேசம்...
- தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ மனு...
- வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில், ஜூன் 4ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை... மீறினால் கடும் நடவடிக்கை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை...
- தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.. கொடைக்கானலில் 5 நாள்கள் தங்கும் நிலையில், டிரோன்கள் பறக்க தடைவிதிப்பு..........
- ஐ.பி.எல். தொடரின் 47வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி... டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...
- ஐ.பி.எல். தொடரின் 48வது லீக் போட்டியில், லக்னோ மற்றும் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை... லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டி...