காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்தில் இறுதி வாக்கு சதவிகிதம் சிறிய அளவில் மாறுபடலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம்..... மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய அவசியல்லை என்றும் தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல்.....
- உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்பட்டது... வாக்குச்சாவடி வாரியாக வாக்குப் பதிவு விவரங்களை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தந்தி டிவிக்கு விளக்கம்...
- தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது... வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்...
- கர்நாடகாவில் மூன்று கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என சிக்பல்லாபூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி......மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், முத்ரா கடன் திட்டம் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் பேச்சு........
- 150 தொகுதிகளை தாண்டி ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது என பீகார் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி திட்டவட்டம்.... நாட்டிலுள்ள 70 கோடி மக்களின் சொத்தும் 22 தனிநபரின் சொத்தும் சமம் என்றும் சாடல்.....
- முதல்கட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருப்பது வெட்டவெளிச்சமாகி விட்டது... ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு...
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.... கேரள தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உறுதி......
- மணிப்பூர் மக்களவை தொகுதிகளில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில், 22-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு.......... குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவு....
- ஐபிஎல் 35வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...... 267 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி 199 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது........
- இன்று பிற்பகல் நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதல்... இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், பஞ்சாப் - குஜராத் அணிகள் பலப்பரீட்சை....