காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிரமாண்ட வாகனப் பேரணி மூலம் வாக்குசேகரிப்பு..... அம்பேத்கரே வந்து அரசியல் சாசனத்தை மாற்ற நினைத்தாலும் அது முடியாது என்று திட்டவட்டம்...
- கோவையில், ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி பிரசாரம்... இது சாதாரண தேர்தல் அல்ல, தத்துவப் போர் என்றும் பிரதமர் மோடியின் அரசு வெளியேற வேண்டிய நேரம் இது என்றும் பேச்சு....
- குடும்ப அரசியல் என்று கூறி, எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிக்கிறார் பிரதமர் மோடி... மக்களை சந்தித்துத்தான், அரசியலுக்கு வந்துள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்...
- பாஜகவை ஏன் எதிர்க்கவில்லை என்றால், அது கூட்டணி தர்மம் என்கிறார் ஈ.பி.எஸ்...... அ.தி.மு.கவை பற்றி சொல்ல எதுவும் இல்லை... சிம்ப்ளி வேஸ்ட்..." என்றும் விமர்சனம்....
- திமுக வாங்கிய 656 கோடியில், ஆன்லைன் ரம்மி நிறுவனம் மட்டும் 509 கோடி கொடுத்துள்ளதாக ஈபிஎஸ் விமர்சனம்..... தேர்தல் பத்திரம் பற்றி பேச திமுக தலைவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றும் கேள்வி.....
- 2024-இல் அதிமுகவை ஒழிப்பதாகக் கூறிய அண்ணாமலைக்கு ஈபிஎஸ் கண்டனம்..... யாருக்கும் அடிமையாக இல்லாமல், அஞ்சாமல் துணிச்சலுடன் இருக்கும் கட்சி அதிமுக என்றும் பேச்சு.....
- மதுரையில் 2 கிலோ மீட்டருக்கு ரோடு ஷோ நடத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...... தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழக வளர்ச்சிக்கு பாஜக மட்டுமே அக்கறை காட்டுவதாக பேச்சு.....
- காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தீவிர பிரச்சாரம்......... பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையில்லாமை கோர தாண்டவம் ஆடிவிட்டதாக விமர்சனம்....
- சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரச்சாரம்..... நாட்டின் வளர்ச்சி பற்றிய புரிதல் பாஜக வேட்பாளரிடம் உள்ளதாக பேச்சு....
- ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜேக் மெக்கர்க் - கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி அதிரடி........ லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.......
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் மோதல்..... புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள பஞ்சாப் அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு