"காங்.-திமுக கூட்டணியால் ஏன் பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்க முடியவில்லை?"
திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பால கணபதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி திருநின்றவூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்... அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஸ்மிருதி ராணி, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியால் ஏன் பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பிரச்சார ஊர்வலம் நடைபெற்ற நிலையில், இதன் காரணமாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...