ராகுல் காந்தி வெளியிட்ட முக்கிய வீடியோ!

Update: 2024-04-19 03:13 GMT

ராகுல் காந்தி வெளியிட்ட முக்கிய வீடியோ!

#rahulgandhi | #thanthitv

பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போராடுவோம் என அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்...

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் முதுகெலும்பு மற்றும் கட்சியின் டிஎன்ஏ என்று புகழாரம் சூட்டியுள்ள ராகுல், பாஜக-ஆர்எஸ்எஸ் ஆனது

இந்தியா என்ற கருத்துக்கு எதிரானது என்றும், அவர்கள் அரசியலமைப்புச் சட்டம், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை தாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்... ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக தெருக்களிலும், கிராமங்களிலும், எல்லா இடங்களிலும் போராடும் காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாவலர்கள் என பெருமிதம் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரசின் அறிக்கையில் இந்திய மக்களிடமிருந்து முக்கிய யோசனைகளைக் கொண்டு வர காங்கிரஸ் தொண்டர்கள் உதவியுள்ளதாகத் தெரிவித்த ராகுல் காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன்,

பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போராடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்