#cuddalore #2024elections
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சியாக அறிவிக்கக் கோரி எஸ்.ஏரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவத்தூர், சேமக்கோட்டை ஆகிய இரு ஊராட்சிகளிலும் இணைந்துள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், அரசின் நலத்திட்டங்கள் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆட்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தையின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தனி ஊராட்சியாக அறிவிக்கும் வரை மக்களவைத் தேர்தலில் ஓட்டுப் போவதில்லை எனக்கூறி வீடுகள் தோறும் கருப்புக் கொடி கட்டி, கிராம மக்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.