தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகழேந்தி அவசர மனு அளிப்பு வெளியான காரணம்

Update: 2024-03-30 01:59 GMT

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அவசர மனு ஒன்றை அளித்துள்ளார்.

அ.தி.மு.க. ஏ மற்றும் பி படிவங்களில் யார் கையெழுத்து இடவேண்டும் என்பதை தேர்தல் நடத்தும் ஆணையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை என்று அம்மனுவில் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதனை முடிவு செய்யாமல் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒரு தரப்புக்கு வழங்கினால் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக அமைந்துவிடும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூறியும் தன்னுடைய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் இதுவரை எழுத்துப்பூர்வமாக எந்த பதிலையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்று அம்மனுவில் புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு இறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அம்மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்