"முதல்ல இத செஞ்சிட்டு எனக்கு சமூகநீதி பாடம் எடுங்க" - CM ஸ்டாலின் கேள்விக்கு ராமதாஸ் பதில்

Update: 2024-03-30 08:28 GMT

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்டல் ஆணையம், காகா கலேல்கர் ஆணைய அறிக்கைகளை குப்பைத் தொட்டியில் போட்டு வைத்திருந்த காங்கிரஸ் அரசிடம் இருந்தே, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வென்றெடுத்து கொடுத்த‌தாக கூறியுள்ளார். அதே போன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் சமூக நீதியை வென்றெடுத்து கொடுக்க முடியும் என்றும் டாக்டர் ராமதாஸ் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 6 முறையும் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைத்த‌ திமுக, கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த‌தா? என கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூகநீதி பற்றி பாமகவுக்கு பாடம் எடுக்கட்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்