மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர்... அதனாPPல்தான் மக்களவை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்ற சிலர், மாநிலங்களவை எம்.பியாக தேர்வாகியுள்ளளனர் என தெரிவித்தார். இது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மறைமுகமாக விமர்சித்ததாக கருதப்படுகிறது. மேலும் பேசிய பிரதமர் மோடி, அமேதியில் தோற்று ஓடிய ராகுல் காந்தி, வயநாட்டில் இருந்தும் ஓடிவிடுவார் என கடுமையாக விமர்சித்தார்...