வரிசையாக வாக்குறுதிகள் கொடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர பிரச்சாரம்
#bjp #thanthitv #kannyakumari #PonRadhakrishnan
தன்னை வெற்றி பெறச் செய்தால் கன்னியாகுமரியின் கனிம வளங்களை காக்கவும், புற்று நோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என பொதுமக்களுக்கு பொன் ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்தார். கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வில்லுக்குறி பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொது மக்களை சந்தித்த அவர், தன்னை வெற்றி பெறச் செய்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் கனிம வளங்களை காப்பேன் எனவும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும், அத்தியாவசிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுப்பேன் எனவும் வாக்குறுதி அளித்தார்