'நோட்டா'வுக்கு அதிகமான ஓட்டு - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-04-27 01:58 GMT

'நோட்டா'வுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகும் தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரும் பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியை சேர்ந்த ஷிவ் கேரா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

'நோட்டா'வுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகும் தொகுதிக்கு தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

அத்தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், ஏனையோரின் வேட்பு மனுக்கள் திரும்பப் பெற்றதாலும், பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற சூழலிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார். வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்