பிரதமர் அடுத்த 18 நாட்கள் தமிழகத்திலே தங்கினாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, கொரானா காலத்தில் பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறிய அவர், தேர்தலுக்காக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளார் என்றார். பிரதமர் மோடி அடுத்த 18 நாட்கள் தமிழகத்திலேயே தங்கினாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.