#kamalhaasan | #dmk | #electioncampaign
"பாஜக தொடாத மெயின் பாயிண்ட்" - நோட் பண்ணி பிடிச்ச கமல்ஹாசன்
ஜி.எஸ்.டி. வரி கொங்கு மண்டலத்தை கொஞ்சம் அழித்து விட்டது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரைஆதரித்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி கொங்கு மண்டலத்தை கொஞ்சம் அழித்து விட்டது எனவும், பாஜகவினர் கூட ஜி.எஸ்.டி வரியை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கவில்லை எனவும் கூறினார்.