தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகள் - களமிறங்கும் பார்வையாளர்கள் - தேர்தல் ஆணையம் காட்டிய அதிரடி
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகளை கண்காணிக்க 39 பொது பார்வையாளர்களையும், 20காவல்துறை பார்வையாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சி.விஜில் செயலி மூலமாக இதுவரை 864 தேர்தல் புகார்கள் பதிவாகியுள்ளதாக கூறினார். தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றாமல் பொது இடங்களில் சுவர்களில் இருந்த 2 லட்சத்து 97 ஆயிரத்து 83 விளம்பரங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், தனியார் இடங்களில் சுவர்களில் இருந்த 96 ஆயிரத்து 541 விளம்பரங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் தெரிந்துகொள்ளும் விதமாக suvidha செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்
நாளை பிற்பகல் 12மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.