கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமித்ஷா கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாலையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்து அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய அமித்ஷா, தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார்... மேலும் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் என உறுதியளித்தார். திமுக அதிமுக கட்சிகளை புறக்கணித்து பாஜகவை பொதுமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அமித்ஷா, அயோத்தி ராமர் கோயில், சனாதன தர்மம் ஆகியவற்றை அவதூறாக பேசி திமுக இந்துக்கள் மனதைக் காயப்படுத்தியதாகவும், பாஜக வெல்லும் 400 சீட்டுகளில் பொன்ராதா கிருஷ்ணனுடையதும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்...