"முக்கிய அறிவிப்பு நாளை ஓட்டு போட செல்லும் மக்களுக்கு..." வெளியான முக்கிய அறிவிப்பு

Update: 2024-04-18 09:20 GMT

#loksabhaelection2024 | #elections2024

"முக்கிய அறிவிப்பு நாளை ஓட்டு போட செல்லும் மக்களுக்கு..." வெளியான முக்கிய அறிவிப்பு

தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் எந்தெந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், மாற்றாக எந்த ஆவணங்களை காண்பிக்கலாம் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை,

புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,

தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்தலாம்.

ஓட்டுநர் உரிமம், PAN Card, வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

பாஸ்போர்ட், இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்