"கெட்ட பேரு எனக்குதான்.. வீட்டுல போய் படுத்து தூங்குறேன்" - அண்ணாமலை திடீர் சாலை மறியல்

Update: 2024-04-15 05:04 GMT

#annamalai | #coimbatore | #bjp

"கெட்ட பேரு எனக்குதான்.. வீட்டுல போய் படுத்து தூங்குறேன்" - இரவில் அண்ணாமலை திடீர் சாலை மறியல்..

ஸ்தம்பித்த கோவை - திருச்சி NH ரோடு

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதால், பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை திடீரென சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் சூலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, பாப்பம்பட்டி பிரிவில் சரியாக இரவு 9.50 மணியளவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாகனத்தின் முகப்பு விளக்குகள் மற்றும் ஒலிப் பெருக்கிகளை அணைத்துவிட்டு காரில் சென்ற அண்ணாமலை, அப்போது சாலையில் இருந்த மக்களை பார்த்து கையசைத்து வாக்கு கேட்டதாக சொல்லப்படுகிறது. புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அண்ணாமலையின் வாகனத்தை தடுத்தி நிறுத்தி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என கண்டித்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த அண்ணாமலை திடீரென காரில் இருந்து இறங்கிய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அண்ணாலை மறியலை கைவிட்டு புறப்பட்டு சென்ற நிலையில், இந்த சாலை மறியலால் கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் கடும் போக்குவரத்து

Tags:    

மேலும் செய்திகள்