காலை வேட்புமனு தாக்களில் திக்குமுக்கு...`ENGLISH பேசுனாலும் தமிழன் தான்'...நாம் தமிழர் வேட்பாளர்...

Update: 2024-03-26 10:38 GMT

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் கௌசிக், வேட்பு மனுதாக்கல் செய்தபோது தேர்தல் உறுதிமொழியை தமிழில் வாசிக்க முடியாமல் தடுமாறினார். தொடர்ந்து, தேர்தல் உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர் வாசிக்க அதனைப் பின்தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வேட்பாளரான கௌசிக் ஓமன் நாட்டில் படித்தவர் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் அரசியல் களத்திற்கு தான் புதிதானவன் என்றும், அதனால்தான் வேட்புமனு தாக்கல் உறுதிமொழி எடுக்கும்போது சற்று தடுமாறியதாகவும் விருதுநகர் நாம் தமிழர் வேட்பாளர் கெளசிக் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்