நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 17 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், 6 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், 2 தொகுதிகளில் ஜனசேனா கட்சியும் போட்டியிட உள்ளன. 175 சட்டமன்ற தொகுதிகளில் 144 தொகுதிகளில் தெலுங்கு தேசமும், 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சியும் போட்டியிட உள்ளன. சட்டமன்ற தேர்தலில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவந்தலாவிலும், சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.