புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு திடீரென பறக்கும் படையினர் வந்ததால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார். இவர், அறந்தாங்கி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பொதுமக்களுக்கு பணம் அளிக்கும் விதமாக டோக்கன் விநியோகிக்கப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.