"தேர்தல் ஆணையர் ராஜினாமா" - தலைமை தேர்தல் ஆணையர் அதிர்ச்சி விளக்கம்

Update: 2024-03-17 07:17 GMT

தனிப்பட்ட காரணங்களுக்காகவே முன்னாள் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்...2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி மற்றும் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது, முன்னாள் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா குறித்து கேள்வி எழுப்பிய போது, தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் ராஜினாமா செய்ததாகவும் அப்படி தனிப்பட்ட காரணங்கள் இருந்தால் அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் எப்போதும் மாற்றுக் கருத்துக்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கும் எனவும் கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்