தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா.. தேர்தல் நடக்காதா? - மல்லிகார்ஜூன கார்கே எழுப்பும் சந்தேகம்
இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அருண் கோயல் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விரைவில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தற்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது தேர்தல் ஆணையமா அல்லது தேர்தல் நீக்கமா எனவும் கேள்வி எழுப்பியுள்ள அவர், நமது சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழிவை நாம் நிறுத்தாவிட்டால், நமது ஜனநாயகம் சர்வாதிகாரத்தால் அபகரிக்கப்படும் எனவும் விமர்சித்துள்ளார்.