மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேமுதிக, பாமகவை தங்களது அணியில் இணைக்க அதிமுக முயன்று வருகிறது. குறிப்பாக பாமகவிற்கு முந்தைய தேர்தலில் வழங்கியதைப்போன்று, 7 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க அதிமுக தயாராக உள்ளதாகவும், ஆனால் பாமக கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதியை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை கூட்டணி தொடர்பாக பாமக எந்த முடிவும் எடுக்காத நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு, கூட்டணி குறித்து பாமக விரைந்து முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.