ஒரு ஓட்டுக்காக ரூ.1,70,000 செலவு..கடல் கடந்து கடலூருக்கு மாஸ் என்ட்ரி. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு

Update: 2024-04-19 15:00 GMT

26 மணி நேரம் பயணம் செய்து நியூசிலாந்தில் இருந்து கடல் கடந்து கடலூருக்கு வந்து வாக்களித்துள்ளார் மருத்துவர் ஒருவர்... கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த மருத்துவர் வினோத் குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வரும் நிலையில் தேர்தலுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊர் வந்துள்ளார். தொடர்ந்து இன்று செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார். வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்