பாஜகவில் இணைய போகிறாரா விஜயதாரணி..? - உடைத்து பேசிய செல்வப்பெருந்தகை

Update: 2024-02-22 12:18 GMT

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு முடிவுரையை பா.ஜ.க எழுதி வருவதாகத் தெரிவித்தார். பெட்ரோல், பால், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், 10 ஆண்டுகளில் தொழிலாளருக்கு சம்பளம் அதே நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்த அஜோய்குமார், யாருக்கும் வேலை வாய்ப்பில்லை என கூறினார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் தங்களது அலுவலகத்தை பா.ஜ.க அலுவலகத்திற்கு மாற்றி விடலாம் என்றும் அஜோய்குமார் தெரிவித்தார். பா‌.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு சரியான பதிலடியை தமிழகத்தில் கொடுத்து வருவதாகவும் அஜோய்குமார் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்