#BJP | #JanardhanaReddy
பாஜக டூ சுயேச்சை டூ காங். டூ பாஜக..ஒரு மனுசன் பல்டி அடிக்கலாம்.. ஆனா..களத்தை மிரளவிடும் ஜனார்த்தன ரெட்டி
கர்நாடகாவில் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்... இரும்பு தாது மற்றும் குவாரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற பின்னர் ஜனார்த்தனனை பாஜக ஓரம் கட்டியதால் அதிருப்தி அடைந்த அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தானே ஒரு கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பெல்லாரி தொகுதியில் மனைவியை வேட்பாளராக நிறுத்தி பாஜகவை தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்யசபா தேர்தலின் போது ஜனார்த்தன ரெட்டி கர்நாடக முதல்வரை சந்தித்து தனது ஆதரவை காங்கிரசுக்கு அளித்தார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்று ஜனார்த்தன ரெட்டி பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.