திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இணையதளம் வாயிலாக புகார் அளித்துள்ளார். அதில் போல்சர்வே (Pollsurvey.top) என்ற இணைய பக்கத்தில், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பதை குறிக்கும் வகையிலான புகைப்படங்கள் மற்றும், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள், பாஜக தேர்தல் போனஸ் என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த தகவல்களை சமூக வலைதலங்களில் ஷேர் செய்தால், பரிசுத்தொகை கிடைக்கும் என்ற விளம்பரங்களும் அதில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் போனஸ் என கூறி, விளம்பரம் செய்வது பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களை நேரடியாக பணம் வழங்குவது போன்று உள்ளதாக கூறியுள்ளார். ஆணையம் உடனடியாக தலையிட்டு, பாஜக மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.