அதிமுகவுடன் உறுதியான கூட்டணி... அசுர பலம்.. ஈபிஎஸ்ஸின் சிரிப்பு

Update: 2024-03-05 12:53 GMT

அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை, அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், தொகுதிகள் குறித்து தங்கள் கருத்துகளை அவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்