தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தியாகராய நகர், கண்ணம்மா பேட்டை பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஜெயவர்தன் ஒவ்வொரு வீடு வீடாக சென்று மக்களை நேரில் சந்தித்தும், குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்... செல்லும் இடமெல்லாம் அவருக்கு அதிமுக, கூட்டணிக் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்... முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்...