ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை, ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் பொதுமக்கள் வரவேற்றனர். எம்.பியாக வெற்றி பெற்றால், மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளை அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்தார்.