#thanthitv #elections2024 #electioncommission
தேர்தல் களத்தில் புதிய திருப்பம் - தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு
தேர்தல் விளம்பரம் தொடர்பான பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களில், அதன் பதிப்பாளர்களின் விவரங்களை கட்டாயம் அச்சிட வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரச்சார தகவல் தொடர்புகளில் வெளிப்படை தன்மையையும், பொறுப்புத் தன்மையையையும் உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 127 ஏ பிரிவின் கீழ், தேர்தல் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றில் அச்சகத்தார் மற்றும் பதிப்பாளர்களின் விவரங்கள் இல்லாமல் வைக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.