ஓபிஎஸ்ஸுக்கு பெயரால் வந்த புது சிக்கல்... - "வாக்காளர்களை குழப்ப சதியா?"
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் நிலையில், அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷ்ணு சந்திரனிடம் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, கடந்த காலங்களில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அதிமுகவினர் தற்போது தனக்கு எதிராக வாக்கு சேகரிப்பது கால சூழ்நிலையால் தான் என பெருந்தன்மையுடன் பதிலளித்தார்...