வேட்புமனு டெபாசிட் தொகையை ரூ.10 நாணயமாக எடுத்துவந்து மிரளவிட்ட தேசிய கட்சி வேட்பாளர்

Update: 2024-03-26 05:45 GMT

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக உடுமலையை சேர்ந்த கிருபாகரன் பெஞ்சமின் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டெப்பாசிட் தொகை 25 ஆயிரம் ரூபாய்க்கு, பத்து ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டி எடுத்து வந்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பயன்படுத்த தயங்கி வருவதால், தான் இவ்வாறு செய்ததாக கிருபாகரன் பெஞ்சமின் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்