"தலைவர் என்பவர் இப்படி இருக்க வேண்டும்" - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய ராகுல்
#rahulgandhi | #Congress
"தலைவர் என்பவர் இப்படி இருக்க வேண்டும்" - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய ராகுல்
ஒற்றுமையாக உள்ள இந்தியாவை பிளவுபடுத்த பாஜக முயற்சி செய்வதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு செல்வதற்காக, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தித தமிழக - கேரள எல்லைப்பகுதியில் உள்ள தாளூரில் தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அவர் வந்த ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்த ராகுல், அவரை பார்க்க திரண்ட மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, அங்கிருந்து கார் மூலம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேவாலயத்திற்கு வந்த ராகுல்காந்தி, அங்கு நின்றிருந்த சிறுவர்களுடன் கை குலுக்கி மகிழ்ந்தார். பின்னர், அங்கிருந்த கூட்டரங்களில் பொதுமக்களிடையே உரையாற்றிய அவர், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற கோட்பாட்டின் மூலம் பாஜக மக்களை பிரிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் தலைவர் என்பவர், அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பராக இருக்க வேண்டும் என கூறிய ராகுல்காந்தி, ஆனால், மோடி அப்படி இல்லை என சாடினார்.